காத்திருப்பு….இந்த சொல் நமக்கு மிகவும் அந்நியமானதாக தெரியலாம்.
ஆனால் காத்திருப்பு நமக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. நம்மை நாமக்குவதில் காத்திருப்பு பெரும் பங்கு வகிக்கிறது.
நாம் எல்லாரும், எப்போதும் ஏதோ ஒன்றிற்காகக் காத்துகொண்டு தான் இருக்கிறோம்.
அது ஒரு வேலைக்காக இருக்கலாம், வாழ்க்கை துணைக்காக இருக்கலாம், அல்லது நேத்து அமேசானில் ஆர்டர் செய்த பொருளுக்காக கூட இருக்கலாம்.
ஒரு முறை உற்று பார்த்தீர்கள் என்றால் நம் வாழ்வு காத்திருப்புகளால் நிறைந்திருக்கிறது என்பதை உணர்வீர்கள்.
இந்தக் காத்திருப்புகள் ஒவ்வொன்றும் நமக்குள் புதிய அனுபவங்களை உருவாக்குகின்றன. நம்பிக்கைகளை விதைக்கின்றன. தோல்விகளைத் தாங்கி கொள்ள கற்று தருகின்றன.
நம் வாழ்வில் நாம் எதிர்பார்க்கும் ஒவ்வொரு மாற்றமும், ஒவ்வொரு முன்னேற்றமும் காத்திருப்பின் வழியேதான் வருகின்றன. காத்திருப்பு நம்மை பக்குவப்படுத்துகிறது. நம் இலக்குகளை தெளிவாக்குகிறது. நம் முயற்சிகளுக்கு அர்த்தம் கொடுக்கிறது.
வாழ்க்கையே ஒரு காத்திருப்பு தான். பிறக்கும் நாம் ஒவ்வொருவரும் நாம் காலம் முடிவதற்காக காத்திருக்கிறோம்.